Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விண்வெளித்துறையில் புதிய சாதனை படைக்க சீனா மும்மூரம்!

பீஜிங்: விண்வெளித் துறையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைப்பதற்காக 20 திட்டங்களை நிறைவேற்ற சீனா முடிவெடுத்துள்ளது.

சீனா ஏற்கனவே, விண்ணில் ஏவிய தியான்காங் 1 என்ற ஆய்வகம், விண்ணில் மிதந்தபடி உள்ளது. இதில் தங்கியிருந்து சீன விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக, தியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வகத்தையும் விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகிறது. அதேபோல், 'லாங் மாரச் 2எஃப்' ராக்கெட் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக ஷென்ஸோ 11 விண்வெளி ஓடமும் ஏவுவதற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு விண்வெளித்துறையில் புதிய சாதனைகளை படைக்கும் விதமாக 20 திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்த ஆண்டு தியான்காங் 2 விண்வெளி ஆய்வகம் மற்றும் ஷென்ஸோ 11 விண்வெளி ஓடம் ஆகியவற்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதுதவிர இந்த ஆண்டு 20 விண்வெளித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும் பெலா ரஸ் நாட்டின் தொலைதொடர்பு செயற்கைகோளையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ