Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவில் அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்... 57 பேர் பலி!

பெய்ரூட்: சிரியாவில் உள்ள அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 57 பேர் பலியாகி உள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் முற்றியபோது முதல் மோதல் வெடித்தது, இதனையடுத்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பலர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து ரஷ்யா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிரவாத இயக்கங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் அல்-நுஸ்ரா மற்றும் ஐ.எஸ். இரண்டு தீவிரவாத இயக்கங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. இந்த இயக்கங்கள் இடையேயும் சிரியாவில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அல்-நுஸ்ரா தீவிரவாத இயக்கம், ஜிகாதிகள் அல்லாது சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியார்களுடன் தொடர்பு கொண்டு உள்ளது. அல்-நுஸ்ரா தீவிரவாத இயக்கம், ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது.

இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தில் பரபரப்பான மார்க்கெட் பகுதி அருகே உள்ள அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் சிரிய நாட்டு கிளையான அல்-நுஸ்ரா முன்னணி சிறையின் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 21 பொதுமக்கள், 29 தீவிரவாதிகள் மற்றும் 7 கைதிகள் பலியாகினர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

மேலும், மாரத் அல்-நுமானில் ரஷ்யா தாக்குதல் நடத்திய கட்டடத்தில் தீவிரவாதிகள் நீதிமன்றம் மற்றும் சிறை உள்ளது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளனர் என்றும், அவர்களில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அது தெரிவித்து உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close