Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் தொடங்கின!

கொழும்பு: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில், அந்நாட்டு அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நேற்று தொடங்கி உள்ளன. இதன் மூலம் மீண்டும் ஒரு ஈழப்போர் உருவாவது தவிர்க்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

இலங்கை அதிபராக பதவி ஏற்று ஓராண்டை மைத்ரிபாலா சிறிசேனா நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்ட அந்த நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யவும், 1978-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத்திற்கு பதிலாக புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றவும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின.

புதிய அரசியல் சாசனத்தை வடிவமைப்பதற்காக 17 பேர் கொண்ட அரசியல் சாசன சபையை உருவாக்கும் தீர்மானத்தை இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.

புதிய அரசியல் சாசனம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ''மீண்டும் ஒரு உள்நாட்டு போரை எதிர்பார்க்காததனால் எமது அரசு அதிபருக்கான நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதவாதிகளின் கருத்துக்களுக்கு ஏற்ப தனது கடமைகளை அரசு நிறைவேற்றும், தீவிரவாதத்தை நிராகரிக்கும்" என்றும் தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ