Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லை தாண்டும் படகுகள் பறிமுதல் செய்யப்படும்... இலங்கை அமைச்சர்!

கொழும்பு: எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்து உள்ளார்.

இலங்கை கடலில் அத்துமீறி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்து செல்லும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளது. இலங்கை சிறையில் தற்போது 89 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது 59 விசைப்படகுகளும் இலங்கையின் பிடியில் உள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழக மீனவர்களின் மீன்பிடி விவகாரம் மற்றும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள், இந்திய மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் அழிக்கப்படுதல், துறைமுகங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சரமாரியாக குற்றஞ்சாட்டினார்கள்.

மேலும், 'விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள், இந்தியாவின் இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லையா?, இருதரப்பு மீனவர்களையும் மோதவிட்டு அரசியல் லாபம் தேட முயல்கிறீர்களா?' என அடுக்கடுக்கான கேள்வியையும் அவர்கள் அப்போது முன்வைத்தார்கள்.

இதற்கு அமைச்சர் மகிந்த அமரவீர பதில் அளிக்கும்போது, ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்னை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகாலமாக இது இருந்து வருகிறது. அத்துடன் பக்கத்து நாடான இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது. ஆனால், அதேநேரம் இந்தியாவின் இழுவை படகுகளால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதை ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்ய கடற்படை மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் இழுவை படகுகள் மற்றும் வலைகளை திரும்ப கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது நாட்டின் 12 கிலோ மீட்டர் நீளமான கடற்பகுதி தொடர்ந்து உயர் பாதுகாப்பு வளையத்திலேயே உள்ளது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close