Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆச்சர்யம்... ஆனால் உண்மை... ஒரு மாணவிக்காக செயல்படும் ரயில் நிலையம்!

ப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் கொக்கைடோ (Hokkaido) என்ற தீவுப்பகுதியில் ஹமி ஷிரட்ராகி (Kami-Shirataki) என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்தது.
 

ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர், ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் பள்ளிப்படிப்பு முடியும் மாதமான மார்ச் 26-ம் தேதி வரை ரயில் நிலையத்தை மூட வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், அந்த மாணவி ரயில் நிலையத்திற்கு வரும் சரியான நேரங்களில் மட்டும் அந்த பாதை வழியாக ரயில் சேவையை நடத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியது.

ஆனால், இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாணவி பயணமாகும் அதே காலை 7.15 மணி நேரத்தில் ஹமி ஷிரட்ராகி ரயில் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரயில் சேவையை பயன்படுத்துவதால், அந்த ரயில் நிலையத்தை மூடாமல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இந்த ரயில் நிலையத்தை அரசு செயல்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ