Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொது இடத்தில் வைத்து தாய்க்கு மரண தண்டனை வழங்கிய ஐ.எஸ். தீவிரவாதி

யக்கத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய தனது தாயை, ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது.

சிரியாவின் ராக்கா நகரில் கடந்த  வெள்ளிக்கிழமையன்று,  பலர் முன்னிலையில் அந்த தாயின் பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தனது தாய், தன்னை இயக்கத்தை விட்டு வெளியேறவும்,  ராக்கா நகரத்தை விட்டு செல்லவும் வற்புறுத்துவதாக இயக்கத் தலைவர்களிடம் அந்த தீவிரவாதி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள் அந்த தாய்க்கு மரண தண்டனை வழங்கியதாகவும், அதனை மகனை விட்டே நிறைவேற்றவும் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராக்கா நகரில்ம் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணை  வெளியே இழுந்து வந்த 20 வயது தீவிரவாதிம்  இந்த கொடூர செயலை பலர் முன்னிலையில் நிகழ்த்தியுள்ளார். இதனை சிரிய மனித உரிமை ஆணையமும் உறுதி செய்துள்ளது.

இதுவரை சிரியா மற்றும் ஈராக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்