Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நர்சிடம் சில்மிஷம்: நோயாளியை அடித்தே கொலை செய்த டாக்டர்! (வீடியோ)

மாஸ்கோ: மருத்துவமனையில் நர்சிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டதையடுத்து,  நோயாளி ஒருவரை ரஷ்யாவில் டாக்டர் ஒருவர் அடித்தே கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் தெற்கு பகுதி நகரமான பேல்கொராத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 29 -ம்தேதி எவ்கேனி பாக்தின்  என்ற நோயாளி சென்றுள்ளார். 59 வயதான அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அந்த நோயாளி, நர்ஸ் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அந்த நர்ஸ்,  டாக்டர் இல்யா செலிண்டினோவ்விடம் சென்று  புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர்,  நோயாளி இருக்கும் அறைக்கு வந்து அவரை கடுமையாகத் தாக்கினார். இதை பார்த்த நோயாளியுடன் வந்த நபர்,  டாக்டரை தடுக்க முயன்றார். ஆனால் டாக்டரோ அந்த நபரையும் தாக்கி கீழே தள்ளி உதைத்தார். இதனால் அங்கு இருந்த மற்ற டாக்டர்கள்,  நர்சுகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
             
டாக்டரின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வைரலாகியுள்ளது. இந்தக் கொலையை அடுத்து டாக்டர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ