Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈராக் வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!

பாக்தாத்: ஈராக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக் தலைநகர், பாக்தாத்தில் ஜவஹாரா வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்குள் நேற்று (11-ம் தேதி) திடீரென நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 22-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், 75-க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக்கில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ