Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய தூதரகம் தாக்கப்பட்டதின் பின்னணியில் பாக். ராணுவம்: ஆப்கன் காவல்துறை

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது என ஆப்கானிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2-ம் தேதி ஆப்கானிஸ்தான், பால்க் மாணாகத்தின் மசார்-இ-ஷெரிப் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுடன் 2 நாட்களாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கங்களும் பொறுப்பேற்க வில்லை. இந்நிலையில், இந்திய தூதரகம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உள்ளனர் என்று ஆப்கானிஸ்தான், பால்க் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் மற்றும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி பதன்கோட் விமானப்படை தளத்தில் ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுப்பிரிவு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close