Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிக்கு பதிலாக கேமரா அறிமுகம்!

லாஸ் வேகாஸ்: நான்கு சக்கர வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய வகை கேமரா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போது நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் டிரைவர்,  தனது வாகனத்திற்கு பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டுமானாலும், இடது மற்றும் வலது பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் மூலமாகத்தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், அவர் தனது தலையை திருப்பாமலேயே எலக்ட்ரானிக் கேமரா மூலம் பின்னால் வரும் வாகனங்களை நேரடியாக பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ நடைபெற்றது. இதில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ தயாரித்த, பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் கேமராக்கள் மூலம் எலக்ட்ரானிக்ஸ் டிஸ்பிளே வழியாக நேரடியாக பார்க்கும் புதிய தொழில்நுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமரா மூலம் எலக்ட்ரானிக்ஸ் டிஸ்பிளேயில் 3 தனித்தனி படங்களாக, தனது வாகனங்களுக்கு பின்னால் உள்ளவைகள் காட்டப்படும். அதேபோல், இரவு நேரங்களிலும், மழையின்போது தனது வாகனத்திற்கு பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் தெளிவாக பார்க்க முடியும்.

இந்த புதிய தொழில் நுட்பத்தால் விபத்துக்குள் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இது நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ