Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இந்த குண்டுகள் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணுகுண்டு இல்லாத உலகு என்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நோக்கமாக இருந்தாலும், ''வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு பிறகு, இந்த சிறிய அணுகுண்டு தேவை ஏற்பட்டுள்ளது'' என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ