Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்: ஒபாமா

வாஷிங்டன்: துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், தனது நிறைவு உரையை அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது, ''கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில் அமெரிக்கா உள்ளது.

வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை.

நாம் இதுவரை புற்றுநோய்க்கு பறிகொடுத்த நமது அன்புக்குரியவர்களுக்காகவும், இப்போது முயற்சித்தால் நம்மால் காப்பாற்ற முடியும் என நம்பும் குடும்பங்களுக்காகவும் புற்றுநோயை பூரணமாக குணப்படுத்தும் நாடாக அமெரிக்காவை மாற்றுவேன்.

இதற்காக, நாடுதழுவிய அளவில் புதிய திட்டம் உருவாக்கப்படும். இந்த புதிய இயக்கத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் தலைமையேற்று வழிநடத்துவார். இதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவை ஒழிக்க அதிக நிதி ஒதுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்திக் கொள்கிறேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close