Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத, நிற வேற்றுமையோடு பிரித்தாண்டு அரசியல் செய்வோரை புறந்தள்ளுவோம்: ஒபாமா

வாஷிங்டன்: மக்களை மதம் மற்றும் நிற வேற்றுமையோடு பிரித்தாண்டு அரசியலில் ஈடுபடுவோரை புறந்தள்ளுவோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஒபாமா தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ''சர்வதேச அளவில் அமெரிக்கா வல்லரசாக திகழ்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. நான் அடுத்த ஆண்டு வளர்ச்சியை பற்றி கவனம் செலுத்துவதில்லை. அடுத்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியை குறித்து மட்டுமே யோசிப்பேன்.

கணினியின் வளர்ச்சி இன்னும் மேலோங்கி செல்ல இருக்கிறது. எனவே, மாணவர்களுக்கு உயர் படிப்பை அளிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இணைய பாதுகாப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

புவி வெப்பமயமாதலை தடுப்பதில் நமக்கும் கடமை உண்டு. சுற்றுச்சூழல் மீது அக்கறையோடு நாம் நடக்க வேண்டும். அமைதியான, வாழ தகுதி படைத்த உலகத்தை நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும்.

தற்போது நமக்கான பாதுகாப்பு குறித்து பேச வேண்டிய சூழ்நிலை உள்ளது. அன்று அல்கெய்தா தீவிரவாதிகள், இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகையே அச்சுறுத்தி வருகிறார்கள். அவர்களை அமெரிக்க படைகள் ஒழிக்கும்.

மக்களை மதம் மற்றும் நிற வேற்றுமையோடு பிரித்தாண்டு அரசியலில் ஈடுபடுவோரை புறந்தள்ளுவோம். நான் எப்போதும் மாற்றத்தின் மீதும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close