Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டம் இல்லை... சர்ச்சைகள் உண்டு... வெளிப்படும் சீனாவின் முகம்..!

சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றாக இருந்தது, ஒரு தம்பதி-ஒரு குழந்தை திட்டம். மக்கள் தொகையை குறைக்க, சீன அரசு மேற்கொண்ட இந்த திட்டம், உலகம் முழுக்க சர்ச்சைகளை கிளப்பினாலும் அசராத சீனா, தனது மக்கள் வளமும், இளைஞர் பலமும் குறைவதைக் கண்டு கொஞ்ச காலம் அதனை தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, இந்த வருடம் ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த சட்டம் தளர்த்தப்பட்டு, ஒரு தம்பதி, இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது அரசு.

இதற்கு முன்னர் இரண்டாவது குழந்தை பிறந்தால்,  குழந்தையின் 'சமுதாய பாதுகாப்பு நிதி' என்ற பெயரில் 7,600 அமெரிக்க டாலர்களை அபராதமாக, அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த முறை ஜனவரி 1-ம் தேதிக்குப் பின்னர் கிடையாது என்றது அரசு. படித்தவுடன் பாராட்டத்தோன்றும் இந்த அறிவிப்பிற்கு பின்னர் இருந்த பிரச்னைகள், கொடுமைகள் தற்போது வெளிவரத் துவங்கி உள்ளது.

சீனாவின் ஹாங்ஷோ மாகாணத்தில் வசிக்கும் ஜூ என்ற பெண்ணிற்கு டிசம்பர் 26-ம் தேதி, பிரசவ தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அன்றே குழந்தை பிறந்தால், அன்றைய சட்டப்படி கடும் அபராதம் செலுத்த நேரிடும் என்பதோடு,  குழந்தையின் சட்ட உரிமைகளும் பறிக்கப்படும் என்பதால், பிரசவத்தை சட்டம் தளர்த்தப்படும் ஜனவரி 1-ம் தேதிக்கு தள்ளிப்போட திட்டமிட்டிருக்கிறார்  ஜூ. இதற்காக ஐந்து நாட்களும், படுக்கையில் ஆடாமல் அசையாமல் படுத்தே கிடந்துள்ளார். அசைவின்றி இருந்ததால், குழந்தை பிறப்பதை தள்ளிப்போட்டிருக்கிறார். பிறகு ஜனவரி 1-ம் தேதி இரவில், பிரசவ வலி வரவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டாம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜூ.

அதேபோல, சீனாவின் யாங் என்ற பெண்ணும், இதே போன்ற துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார். கருவுற்று இருந்த 'யாங்'கிற்கு டிசம்பர் 27-ம் தேதியே பிரசவ வலி வர, குழந்தையை பிறப்பதை தாமதமாக்க, அவரும் முயற்சி செய்திருக்கிறார். கடும் மருத்துவ கண்காணிப்பில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, குழந்தை பிறப்பதை ஜனவரி வரை தள்ளிப்போட்டு, ஜனவரி 1-ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் யாங்.

இந்த துயர நினைவாக அந்த ஆண் குழந்தைக்கு பவான் என்று பெயரிட்டிருக்கிறார் யாங். பவான் என்றால், சீனாவின் உள்ளூர் பணத்தில் 80,000 என்று அர்த்தமாம். ஒரு நாள் முன்னர் பிறந்திருந்தாலும், அந்த பணத்தை அவர்கள் செலுத்தியிருக்க நேரிடும் என்பதால் இந்தப்பெயரை சூட்டியிருக்கிறார் யாங்.

இந்த விஷயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றன. இந்த இரண்டு பெண்கள் மட்டுமின்றி, சீனாவின் பெரும்பாலான பெண்கள், குறிப்பாக டிசம்பர் கடைசி வாரத்தில் குழந்தை பெறவிருந்த பல பெண்களும் இப்படி மருத்துவர்களை வலியுறுத்தி, பிரசவத்தை தள்ளிப்போட வைத்துள்ளனராம். மருத்துவமனை நிர்வாகங்களை இப்படி வலியுறுத்திய சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதுபோன்ற பிரச்னைகளை, சந்தேகங்களை முன்கூட்டியே தீர்க்க வேண்டிய அரசு, இப்படி துயரங்கள் நடக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தது? சட்டம் என்பது எப்போதும், மக்களுக்கு நன்மைகள் அளிப்பதாக சீனாவில் எப்போதும் இருப்பதேயில்லை என வேதனையை கொட்டித் தீர்க்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

- ஞா.சுதாகர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close