Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தோனேசியாவில் அதிபர் இல்லம் அருகே குண்டுவெடிப்பு: 4 பேர் பலி!

ஜகார்த்தா:  இந்தோனேசியாவின் அதிபர் இல்லம் அருகே,  இன்று (வியாழன்) தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
இந்த சம்பவங்கள் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கும் என்று கருதப்படுவதால்,  மற்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவங்களின் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில்  வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா, ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே உள்ள சரினா வணிக வளாகம் மற்றும் உணவு விடுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

குண்டுவெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் அந்தப்  பகுதியை போலீசார் சுற்றி வளைத்து, தீவிரவாதிகளுடன் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்