Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

டோக்கியோ: ஜப்பானின் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

வடக்கு ஜப்பானில் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளைவிட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். ஹோக்கைடோ பகுதியில் சமீபத்தில்தான் புதிதாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தற்காலிகமாக புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

எடிட்டர் சாய்ஸ்