Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத தலைவர் மசூத் அசார் கைது?

இஸ்லாமாபாத்: பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,  பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்துக்குள் கடந்த 2 -ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்து, விமான தளத்தை பாதுகாத்தனர்.  அதே சமயம் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவிய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஈடுபட்டதாக இந்தியா குற்றச்சாட்டியது. மேலும், இதுகுறித்த ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்து ரகசிய இடத்தில் அடைத்து வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்று  செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், மவுலானா மசூத் அசார் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசும் மசூத் கைதானதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ