Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பவர் பால் குலுக்கலில் ஒரே நாளில் பணக்காரரான அமெரிக்க வாழ் இந்தியர் !

ந்தியாவில் லாட்டரியைத் தடை செய்திருந்தாலும், மற்ற உலக நாடுகளில் இந்த முறை இன்னும் பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் நடந்த "பவர்பால்" குலுக்கலில் 3 பேர் பரிசு பெற்றுள்ளனர்.

இதை ஒருங்கிணைப்பது "Multi state lottery association"  எனும் அமைப்பாகும்.குறைந்தபட்ச லாட்டரி தொகை $40 மில்லியன் ஆகும். இந்தத் தொகை 30 தவணையில் கொடுக்கப்படுகிறது. இதுவரை நடந்த லாட்டரி ஜாக்பாட்டில் ஒரே தவணையில் பெற்ற அதிகபட்ச தொகை அளிக்கப்பட்டது மே 18, 2013ல்தான். தற்பொழுது, 13.01.16 அன்று $1.586 பில்லியன் தொகை மூன்று டிக்கெட்டுகளால் பகிர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட் எடுக்கப்பட்ட இடம்:



1) Chino hills, California
2) Mumford, Tennessee
3) Melbourne beach, Florida

வெற்றி பெற்ற 3 டிக்கெட்களில் ஒன்றை விற்றதற்காக Chino Hillsல் வசிக்கும் ஒரு அமெரிக்க வாழ் இந்தியருக்கு $1 மில்லியன் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அவரது 'பால்பிர் அத்வால் ஸ்டோர்' என்ற கடையில்தான் வெற்றிபெற்ற டிக்கெட் விற்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் ஆதாரப்பூர்வமாகக் கூறியுள்ளனர். அத்வால் அவர்கள் இந்தத் தொகையில் ஒரு பகுதியை தானமாகக் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

லாட்டரியில் ஜெயித்த மற்ற 2 டிக்கெட்கள் Tennessee என்ற இடத்திலும் Florida என்ற இடத்திலும் விற்கப்பட்டுள்ளது. பரிசு பெற்ற அத்வால்," இது வாய்ப்புகளின் நிலமாகும். இங்கு யார் வந்தாலும் அவர்கள் கனவு நனவாகும்" எனக் கூறியுள்ளார்.

அத்வால் பஞ்சாப்பைச் சார்ந்தவர். 1980களில் கலிபோர்னியாவிற்கு வந்து "7-eleven" என்ற கடைகளை 4 கிளைகளாக தொடங்கினார்.  புதன்கிழமை நடந்த பவர்பால் விளையாட்டு,  US வரலாற்றிலேயே மிக  அதிக தொகை கொண்ட லாட்டரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது!

ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close