Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பர்கினோ பாசோவில் அல்காய்தா தாக்குதலுக்கு 20 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ)

ர்கினா பாசோ நாட்டில், நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்ரிக்க நாடான இங்கு, குவாகோடாங் என்ற இடத்தில்  ஸ்ப்லெண்டிட் என்ற விடுதி உள்ளது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனை குறிவைத்தே அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்  தீவிரவாதிகள் பிணையாக பிடித்துவைத்திந்த 30 சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.


இந்த குட்டி நாட்டில்  தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை. மற்றொரு ஆப்ரிக்க நாடான மாலியில் இதேபோல் வெளிநாட்டவர் அதிகம் கூடும் வரும் நட்சத்திர விடுதியில் கடந்த நவம்பர் மாதம்  நடத்தப்பட்ட தாக்குதலில் சீனா, அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ