Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்டவாளத்தை காருடன் கடக்க முயன்ற ஓட்டுநர்... நடந்தது என்ன? (விபரீத வீடியோ)

ரஷ்ய நாட்டில் ரயில் விபத்தை தவிர்ப்பதற்காக,  ஓடும் காரில் இருந்து குதித்த ஓட்டுனர் எதிர்பாராமல், அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விதிகளை பின்பற்ற பலவகை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், அதனை பின்பற்றுவர்கள் வெகு சிலர் மட்டுமே. அவசரமாக ஓர் இடத்திற்கு செல்வதற்காக சாலை விதிகளை மீறும்போது சில தருணங்களில் உயிரையே இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் அண்மையில் ரஷ்ய நாட்டில் நிகழ்ந்துள்ளது.

ரயில் தண்டவாளம் மற்றும் வாகன சாலையை இணைக்கும் ஒரு பகுதியில் கார் ஒன்று மிதமான வேகத்தில் வந்துகொண்டு இருக்கிறது. ரயில் தண்டவாளத்திற்கு அருகில் வந்தவுடன், சில அடிகள் தொலைவில் சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டு இருப்பதை கார் ஓட்டுநர் பார்த்துள்ளார்.

ஆனால் கார் தண்டவாளத்திற்கு மிக அருகில் வந்துவிட்டதால்,  காரை நிறுத்தி தப்பிக்க முடியாது என நினைத்த அந்த ஓட்டுநர், ஓடும் காரின் கதவினை திறந்து கீழே குதித்துள்ளார். கார் ரயில் மீது மோதாமல் தண்டவாளத்தை கடந்து சென்றுவிடுகிறது. ஆனால், காரில் இருந்து குதித்த அந்த ஓட்டுநர் அதே இடத்தில் நிற்காமல் தள்ளாடியவாறு சில அடிகள் முன்னோக்கி வைக்கிறார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த ரயில், அவர் மீது மோதி இழுத்துச் சென்றதில், அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சியிலும், அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினாலும் அவர் சறுக்கியவாறு முன்னோக்கி நகர்ந்துள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 
Little early ; Little Closer - THINK!

Little early ; Little Closer - THINK!Location: RussiaThx to the sender

Posted by Sonakar.Com on Friday, January 15, 2016

எடிட்டர் சாய்ஸ்

MUST READ