Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலி நாட்டில் கடமான் வகை மீன்கள் ஆயிரக்கணக்கில் இறப்பு ! (வீடியோ)

சிலி நாட்டிலுள்ள தீவான சாண்டா மரியா கடற்கரையோரம், கடந்த சில நாட்களாக இறந்த நிலையிலான கடமான் வகை ( ஸ்குவிட் ) மீன்கள், ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கி வருகிறது. இவை அதிக அளவில் மடிந்ததற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

சுமார் 10,000  கடமான் வகை மீன்களின்  சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதால், அங்கே வசிக்கும் மக்களின் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுக்க துர்நாற்றம் வீசிவருகிறது.

அந்த நாட்டின் தேசிய மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு வாரியமான sernapesca எனும் அமைப்பிலிருந்து வந்திருந்த நிபுணர்கள், சில இறந்த மீன்களின் உடல்களை பரிசோதனைக்காக பிரத்யேக சோதனைக்கூடங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

சுற்றுச்சூழல் வல்லுனர்கள் சிலர், இந்த வகை மீன்களின் இறப்பிற்கு கடல் நீரின் வெப்ப நிலை கூடியதே காரணம் என கூறுகின்றனர். எனினும் கடலில் ஏற்படும் செயற்கை மாசுகளும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

 

சாண்டா மரியா கடற்கரையோரம் இது போல ஸ்குவிட்களும், மொல்லஸ்க்களும் இந்த பருவத்தில் இறந்து கரையொதுங்குவது புதிதல்ல என்றாலும்,  பெரியளவில் ஏற்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரும், சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளர்ப்பு வல்லுனர்களும் இந்த சூழ்நிலையின் தாக்கத்தை கணித்து, அதை சரி செய்ய கூட்டாக முயற்சித்து வருகின்றனர்.
மீன்கள் கரையொதுங்க ஆரம்பித்து, ஐந்து நாட்களுக்கு பிறகே, அவற்றை அப்புறப்படுத்த சிலி அரசு பல உபகரணங்களை சாண்டா மரிய கரைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தாமதத்திற்கு அந்நாட்டின் அவசரகால மீட்புக் குழுவின் இயலாமையே காரணம் என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

"இந்த துர்நாற்றத்தினால் குழந்தைகளுக்கு எந்த வித உடல் நலக் குறையும் வராமல் தடுக்க அந்த இறைவனால் மட்டுமே இயலும்" என அப்பகுதி வாழ் மக்கள் கூறுகின்றனர்.

முதற்கட்ட சோதனையில் இந்த மீன்களின் இறப்பிற்கு காரணம் "upwelling" எனும் மாற்றமே என மீன்வள மற்றும் விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "upwelling" என்பது, குளிர்ச்சியான மீன்களுக்கு தேவையான சத்து நிரம்பிய ஆழ்கடல் நீர் கடல்மட்டத்திற்கும், உஷ்ணமான சத்து குறைந்த மேற்புற நீர் ஆழ்கடல் பகுதிக்கும் இடம் மாறுவதே ஆகும். இதனால் ஏற்படும் வெப்ப மாற்றம், குறைந்த சத்து போன்றவற்றால் ஸ்குவிட்கள் இறந்திருக்கும் என கூறியுள்ளர் அந்த அதிகாரி.

"இங்கு ஏற்பட்டுள்ள நிகழ்வானது,  மக்களின் உடல் நலத்தை  வேகமாக பாதிக்கக்கூடியது. இதை சீர்செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள் சிலி காவல்துறையினர்.

-பா அபிரக் ஷன்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ