Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்து கோவில் இடங்களை அபகரிக்க பாக். பண முதலைகள் திட்டம்: ரீமா அப்பாஸி

கொல்கத்தா: இந்துக் கோவில்கள் பாகிஸ்தான் நகரில் முக்கிய இடங்களில் உள்ளதால், அந்த இடங்களை அபகரிக்க பணம் படைத்த பெருமுதலைகள் திட்டமிட்டு உள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ரீமா அப்பாஸி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் எழுத்தாளர் ரீமா அப்பாஸி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ''இந்துக் கோவில்கள் பாகிஸ்தான் நகரில் முக்கிய இடங்களில் உள்ளதால், ஹோட்டல்கள் அல்லது வணிக வளாகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்காக அந்த இடங்களை அபகரிக்க பணம் படைத்த பெருமுதலைகள் திட்டமிட்டு உள்ளனர்.

பாகிஸ்தானில் உள்நாட்டுப் போரின்போது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்த மக்கள், தங்களின் சொத்துகளை மீட்க முயற்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்களை முறைப்படி பராமரிக்கின்றனர். அவற்றை அரசு கவனித்துக் கொள்கிறது. ஆனால், பழங்காலத்து கைவினைக் கலைஞர்கள் அங்கு இல்லாததால், அவற்றை முழுமையாக புதுப்பிக்க இயலாமல் உள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ