Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிருகங்களை போன்று மனிதர்களை கொன்று குவித்த ஐஎஸ் (வீடியோ)

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், ஒரே நாளில் அப்பாவி மக்கள் 300 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியாவில் அரசு படைகளுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 16-ம் தேதி அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாதிகள் 16 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவின் டெயிர் எஸ்ஸார் நகரத்திற்கு சென்ற தீவிரவாதிகள், கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 135 பேர் பலியாகியுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிரியாவின் உள்ளூர் செய்தி நிறுவனமான சனா,  அப்பாவி பொதுமக்கள் 300 பேரை பிடித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியிட்டு கொலை செய்தனர் என தெரிவித்துள்ளது. இத்தகவலை இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகால போரில், இதுவரையில்  இல்லாத அளவுக்கு கொடூர தாக்குதல் நடந்துள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள், முதியோர் என வேறுபாடு இல்லாமல் மிருகங்களை போன்று படுகொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இந்த காட்டுமிராண்டித்தனமானதாக்குதலுக்கு சிரியா பிரதமர் வால் அல் ஹலாக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close