Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதல் தோல்வி எது? (வீடியோ)

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிக மோசமான வருமான இழப்பை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளின் ஊதியத்தை பாதியாக குறைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் வல்லரசு நாடான ரஷ்ய போன்ற நாடுகள்,  ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது கடுமையான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய எண்ணெய் வளங்கள் மீது ரஷ்யா மற்றும் அமெரிக்க படையினர் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் எதிரொலியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள ராக்கா நகரில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கருவூல அமைச்சகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஐ.எஸ் அமைப்பு எதிர்பாராத மிக மோசமான விடயங்களை எதிர்கொண்டு வருகிறது. போதிய வருமானமும் ஈட்டப்படவில்லை. எனவே, உலகம் முழுவதும் உள்ள ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகளின் மாத ஊதியத்தை 200 பவுண்டில் இருந்து 100 பவுண்டாக குறைக்கப்படுகிறது.

அதாவது, எந்தவிதமான உயர் பதவியில் உள்ள ஜிகாதிகள் அனைவரின் ஊதியமும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இது அனைவருக்கும் பொருந்தும்’ என கூறப்பட்டுள்ளது.


உலக நாடுகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், முதல் முறையாக தன்னுடைய தீவிரவாதிகளின் ஊதியத்தை குறைத்திருப்பதன் மூலம், ஐ.எஸ் அமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close