Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் பர்தா அணிய தடை... பிரதமர் கேமரூனின் அடுத்த அதிரடி!

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பள்ளிகள், நீதிமன்ற எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கேமரூன் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர், ரேடியோவில் பேசிய உரையின்போது வெளியிட்டார். நீதிமன்றம் மற்றும் சோதனை சாவடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கவும், பள்ளிகளில் சீருடை கலாசாரத்தை பின்பற்றவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், குறிப்பாக இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்கள் மேற்காசிய நாடுகளான ஈராக், சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதை தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். அதே நேரத்தில், பிரான்ஸ் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் டேவிட் கேமரூன் சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று, பெண்கள் பர்தா அணிவது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close