Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! (பிரமிப்பு வீடியோ)

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ,  மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. புளூட்டோதான் சூரியக் குடும்பத்தில் கடைசி என கூறி வருகிறோம். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

தற்போதைய புதிய கிரகமானது,  சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே,  குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது. அந்த கிரகம்தான் சூரியக் குடும்பத்தின் 9வது கிரகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

முன்பு புளூட்டோவும் 9வது கிரகமாக இருந்தது. ஆனால் கடந்த 2006-ம் ஆண்டு புளூட்டோவை,  கிரகத்தின் பட்டியலில் இருந்து விஞ்ஞானிகள் நீக்கி விட்டனர். அதை குள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்த்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த 9-வது கிரகம், புளூட்டோவுக்கு அப்பால் உள்ளதாம். இதற்கான அறிகுறிகளைத் தாங்கள் கண்டுள்ளதாக இரண்டு விண்வெளி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவர்களில் ஒருவரான கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் பிரவுன் கூறுகையில், ‘இந்தப் புதிய கிரகமானது புளூட்டோவுக்கு அருகே இருக்கலாம். இது பூமியை விடப் பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது ஒரு முழுமையான கிரகமாக இருக்கலாம் என்றும் நம்புகிறோம்" என்றார்.


இன்னொருவரான கான்ஸ்டான்டைன் பாட்கின் கூறுகையில், "நிச்சயம் புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கிரகம் உள்ளது. அதில் சந்தேகமே இல்லை. அது மிகப் பெரியதாகவும் இருக்கலாம். முழுமையான கிரகமாக அது இருக்கும் என்று நம்புகிறோம். நமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இது இருக்கலாம்" என்றார்.

பிரெஞ்சு ஆய்வாளர் அலெசான்ட்ரோ மார்பிடெல்லி, "இந்த கிரகமானது சரியாக எந்த சுற்றுப் பாதையில் உள்ளது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி ஒரு புதிய கிரகம் இருப்பது உண்மையாக இருக்கலாம். தற்போது அனைவரின் வேலையும் இந்தக் கிரகத்தைக் கண்டுபிடிப்பதுதான்" என்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ