Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நவீன வரிவிதிப்புச் சட்டம்... அருண் ஜெட்லி!

சிங்கப்பூர்: மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நவீன வரிவிதிப்புச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சட்ட விவகாரங்களுக்கான சர்வதேச மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) மூலம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசும்போது, ''வரி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும், பொருளாதார நிலைத்தன்மை, திட்டமிடுதல் ஆகியவற்றை மனதில் கொண்டும், வரி தொடர்பான பெரும்பாலான சட்டங்களில் படிப்படியாக திருத்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த சட்டத் திருத்தங்கள் தொடர்பாக, மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் சுலபமாக வணிகம் செய்வது அதிகரிக்க வேண்டுமானால், மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும், மாநிலங்களுக்கு இடையே வர்த்தம் மேற்கொள்வதற்கான தடைகளையும் குறைக்க வேண்டியது அவசியமாகும். மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நவீன வரிவிதிப்புச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

அதற்கான பயணத்தில் ஜி.எஸ்.டி. மசோதா முக்கியமான நடவடிக்கையாகும். இந்த மசோதா நிறைவேறினால், வரிவிதிப்புகள் சீராவதோடு, பொருள்களையும், சேவைகளையும் அனைத்து மாநிலங்களும் தடையற்ற முறையில் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் அதிக மக்கள் தொகையும், பல்வேறு வேற்றுமைகளும் இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுவாக உள்ளது. இதற்கு, சட்டங்களையும், விதிமுறைகளையும் வகுப்பதில் மாநிலங்களுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டதே காரணம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close