Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

24 தகுதிகளுடன் 2016ல் குடியிருக்க சிறந்த நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு எது?

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,  2016 -ம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடாக ஜெர்மனி தேர்வாகியுள்ளது.

உலகில் 2016 -ம் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலை உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் பொருட்டு உலக பொருளாதார மையம் உலகின் 60 நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது.
 

இதில் நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், வணிகம், வாழ்க்கை தரம், பாரம்பர்யம் மற்றும் பொருளாதார செல்வாக்கு என 24 தகுதிகளை கொண்டு இந்த பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இத்தகவல்களை சேகரிக்க 16,200க்கும் அதிகமான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும், அதில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் வாழத்தகுந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்.

இந்த பட்டியலில் இந்தியா 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து போர்ச்சுக்கல், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ