Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாலிவுட்டிலும் நிறவேறுபாடு; ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார் வில் ஸ்மித்!

அமெரிக்கா: ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் கறுப்பின நடிகர்களை புறக்கணித்ததால் இந்த ஆண்டு பிப்ரவரி , 28 -ம் தேதி நடக்க இருக்கும் ஆஸ்கர் விழாவினை தான்  புறக்கணிக்கப்போவதாக பிரபல ஹாலிவுட் நாயகன் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மனைவி ஜாதா பின்கட் ஸ்மித் மற்றும் ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீயுடன் சேர்ந்து அவர் இந்த தடாலடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தனியார்  தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “ புகழடைந்தாலும் நாங்கெல்லாம் கறுப்பின மக்களில் ஒருவராகத்தான் இன்னமும் பார்க்கப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நடிகர் பட்டியலில் கூட இனவேறுபாடு காட்டப்படுவது வேதனையளிக்கிறது. இந்த தவிப்பான சூழலில், ஆஸ்கார் விழாவில் கலந்துகொள்வது என்பது சங்கடமான தருணமாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவை எடுக்கவேண்டியதானது. இதை சரியான முடிவாகவே கருதுகிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



 

வில் ஸ்மித் 2 தடவை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதுமட்டுமின்றி, "Concussion," படத்திற்காக இந்த வருடத்தின் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வில் ஸ்மித்தின் கருத்துப்படியே இவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் அனைவருமே வெள்ளையின நடிகர்களாக இருப்பது, உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான்  உலகின் ட்ரெண்டிங் வைரல் இப்போது.

- ம.மாரிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

MUST READ