Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரஸ் பீதி: பெண்கள் கருத்தரிக்க கூடாது என்று எச்சரிக்கை!

மெக்சிகோ நகரம்: தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் நோய் தொற்று பரவி உள்ளதால் வரும் 2018- ம் ஆண்டு வரை பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரேசில்,கொலம்பியா,எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் பெரும் அச்சம் நிலவுகிறது. 

கொசுக்களால் பரவும்  ‘சிகா’ வைரஸ் தொற்று பச்சிளம் குழந்தைகளின் உடலை வெகுவாகப் பாதித்து, குறைபாடு உள்ள குழந்தைகளாக மாற்றிவிடுகிறது என்றும், மூளை வளர்ச்சிக் குறைபாடு  நிகழ்கிறது என்றும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அரசுகள் தரப்பில் கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்று தம்பதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 2018-ம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல இந்த நாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும்,  தென் அமெரிக்க நாடுகள் சார்பில் சிகா வைரஸ் தொற்றுக் குறித்து முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ