Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கையில் நில அதிர்வால் பல இடங்களில் நில வெடிப்பு; மக்கள் பீதி!

கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி பகுதியில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அப்பகுதியிலுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். அதே சமயம் இது நில அதிர்வுதானா? என்பதை உறுதியாக கூற முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம் ஒரு சுண்ணாம்புக்கல் பிரதேசம் எனவும், கால நிலை மாற்றம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் நீர் தட்டுபாடு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ