Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமால் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு?

டந்த இரு வருடங்களுக்கு முன், காணாமால் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின்  உடைந்த பாகங்கள் தாய்லாந்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் நோக்கி போய் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்சின் எம். எச். 370 விமானம் திடீரென்று மாயமானது. எவ்வளவோ தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் என்னவாயிற்று என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு ரீயூனின் தீவு பகுதியில் உடைந்த விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடைத்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் காணாமல் போன இந்த விமானம் பற்றி இல்லை.

இந்நிலையில் தாய்லாந்தின் பக் பனாங் மாவட்டத்தில் தன்யாபட் பதின்கோங்கன் என்ற இடத்தில் விமானத்தின் உடைந்த பாகம் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை தாய்லாந்து அரசு உறுதி செய்யவில்லை. கண்டெடுக்கப்பட்ட பாகத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இது குறித்து எதுவும் தெரிவிக்க முடியுமென்று காணாமல் போன விமானத்தை கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட  கான்பெராவை சேர்ந்த நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close