Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதத்தை ஒழிக்க பாக். கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒபாமா

வஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் மசார்–இ–ஷெரிப் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும், பாகிஸ்தான் பாச்சாகான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 21 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ''தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தீவிரவாத நெட்வொர்க்கை பாகிஸ்தான் சட்ட விரோதமானதாக்க வேண்டும், அழிக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ