Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பவர்கள் நிறுத்த வேண்டும்: சுஷ்மா எச்சரிக்கை!

மனாமா: தீவிரவாதம் தழைக்க, மறைமுகமாக நிதி அளித்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரித்து உள்ளார்.

இந்தியாவுக்கும், அரபு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பஹ்ரைனின் தலைநகரான மனாமாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முன்னிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, ''இந்தியாவின் மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை உலக அரங்கில் முக்கியத்துவம் வகிக்கிறது

தீவிரவாதிகள், நமது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கவும், நமது நகரங்களுக்கும், மக்களுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கணக்கிலடங்காத பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சித்து வரும் நேரத்தில், இந்திய-அரபு நாடுகளின் உறவுகள் வலுப்படுத்துவது வரலாற்றுத் திருப்புமுனையாகும்.

தீவிரவாதம் தழைக்க, மறைமுகமாக நிதி கொடுத்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தையும், அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நிதியுதவியையும் ஒடுக்குவதற்கு புதிய உத்தியை வகுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

தீவிரவாதத்துடன் மதத்தைத் தொடர்புபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மனிதநேயம் மற்றும் இரக்கமற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டே மனிதர்களை வேறுபடுத்த வேண்டுமே தவிர, ஜாதி, மத, வேறுபாடுகளின் அடிப்படையில் அல்ல" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close