Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு!

சான்டியாகோ: அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள சான்டியாகோ, பல்போவா பூங்காவில் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அருகில் அமெரிக்க ராணுவ மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனைக்குள் நேற்று (26-ம் தேதி) காலை நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதையடுத்து, ''கடற்படை மருத்துவ மையம் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெறுகிறது. எனவே, அனைவரும் உடனடியாக வெறியேறுங்கள் அல்லது ஒளிந்து கொள்ளுங்கள் அல்லது எதிர்த்து போராடுங்கள்'' என ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அங்கிருந்து ஒடினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். மேலும், மருத்துவமனையை அமெரிக்க பாதுகாப்பு படையினரும் வளைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த துப்பாக்கி சூடு குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ