Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செக்ஸ் மூலமும் பரவும் சிகா நோய்: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன்: தென் அமெரிக்க நாடுகளில், கொசுக்கள் மூலம் பரவி வரும் சிகா வைரஸ் நோய், பாலுறவு மூலமும் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 

சிகா வைரஸ் நோயால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்படைந்து, பிறக்கும் குழந்தைகள்   சிறிய தலைகளுடன் பிறக்க நேர்கின்றன என்பதால், வரும் 2018-ம் ஆண்டு வரை தென் அமெரிக்க நாடுகளில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,எய்ட்ஸ் நோய் போலவே, பாலுறவு மூலமும் சிகா வைரஸ் தொற்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

44 வயது ஆண் ஒருவரின் விந்தணுவிலும், சிறுநீரிலும் சிகா வைரஸ் இருந்தது கடந்த 2013-ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டது. ஆனால், அப்போது அவரது ரத்தத்தில் அந்த வைரஸ் கிருமி இல்லை. இதை பிரான்ஸ் விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்தார்.

அக்கிருமி அவரது உடலில் எவ்வளவு காலம் இருந்தது என்பதை சரியாக கணக்கிட முடியவில்லை. எனவே இந்த வைரஸ்  ‘செக்ஸ்’ மூலமும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும்  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சிகா என்ற இந்த வைரஸ் கிருமி, கடந்த 2008-ம் ஆண்டிலேயே உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close