Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏமன் அதிபர் மாளிகை அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி!

அதென்: ஏமன் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஏமன் ஆளுநராக இரந்த ஜாபர் சாட் கொல்லப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அய்தரஸ் அல்-ஜூபாய்தி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அல்-ஜூபாய்தியை குறி வைத்து இந்த மாத தொடக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் தப்பித்து விட்டார்.

இந்நிலையில், நேற்று (28-ம் தேதி) ஏமன் அதிபர் மாளிகை அருகில் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலும் ஆளுநர் ஜூபாய்தியை குறி வைத்து, அவரது பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஆனால், அந்த இடத்தில் அல்-ஜூபாய்தி இல்லை என்றும் கூறப்பட்டுகிறது.

எடிட்டர் சாய்ஸ்