Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: இலங்கை அறிவிப்பு!

கொழும்பு: வருகின்ற சுதந்திர தின நாளிலிருந்து, இனிமேல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என அரசு தீர்மானித்து உள்ளது என்று இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்து உள்ளார்.
 
இது தொடர்பாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விழாக்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சிங்கள மொழிக்கும், சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், வருகின்ற சுதந்திர தின நாளிலிருந்து இலங்கையில் சகல அரசாங்க நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் பாடப்பட வேண்டும்.

நாட்டில் நல்லாட்சிக்கான முக்கிய அடையாளத்தில் இது பிரதானமான ஒன்றாகும். சகல இன மக்களையும் பிரதிந்திதுவப்படுத்த இதுவே சரியான அடையாளமாகும். அதேபோல், தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்படுவதை இனவாத செயல்பாடாக கருதும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்