Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒபாமாவுக்கு தெரிந்தது டொனால்ட் ட்ரம்ப்புக்கு தெரியவில்லையே ஏன்?

மெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் யாரை வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அவரது பேச்சுகளால் எழுந்த சர்ச்சை துவங்கி,  அவர் பத்திரிகையாளர்களை அரங்கில் இருந்து வெளியெ போக சொன்னது வரை அனைத்துமே ஆன்லைன் வைரல் லிஸ்டில் இடம் பிடித்தன.


அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் பிரபலமானது ஹோப், ப்ராக்ரஸ், சேஞ்ச் எனும் ஒபாமா முன்வைத்த தாரக மந்திரம். அதோடு மட்டுமின்றி YES WE CAN எனும் தலைமை பண்பை விளக்கும் விதமான வாசகத்தையும் கொண்டு அவர் பிரசாரம் செய்தார்.

ஆனால் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரங்களை இந்த மூன்று வார்த்தைகளை தவிர வேறு எதையும் அதிகம் மையப்படுத்தவில்லை என அமெரிக்க ஊடகங்களும், சமூக வலைதளங்களும் விமர்சிக்கின்றன. அவை வெற்றி (WIN), ஒப்பந்தங்கள்(DEAL) மற்றும் எல்லையின் சுவர் கட்டுவது (Build a Wall) மட்டும்தான்.

 


ஒபாமாவின் 'நாம்' என்ற வார்த்தையை இவர் 'நாம் மட்டும்' என மாற்றி பிரசாரம் செய்வது அமெரிக்காவில் அவருக்கு மதிப்பை குறைக்கின்றன. இது தவிர பொது சந்திப்புகளை புறக்கணிப்பது, புதிய அமெரிக்காவை உருவாக்குவேன் எனக் கூறுவது என அனைத்து விஷயங்களிலும் அமெரிக்காவை மட்டும் பிரதானப்படுத்தி பேசுவதை உலக மக்களும் அவரை வெறுக்கவே செய்கின்றனர்.

முஸ்லிம்களை அமெரிக்காவை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்பது துவங்கி,  அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம் என்று சர்வாதிகார போக்கையே வெளிப்படுத்தி வருகிறார். உலகிற்கே பிடித்த அமெரிக்க அதிபர்கள் பட்டியலில், ஒபாமாவுக்கும் ஓரளவுக்கு இடம் கிடைத்துள்ளதற்கு காரணம் அவரது தலைமை பண்பும், நாம் என அனைவரையும் ஒருங்கிணைத்து கூறும் மனப்பான்மையும்தான். ஆனால் அது சுத்தமாக ட்ரம்பிடம் இல்லை என்பதுதான் உண்மை என்கின்றனர் அமெரிக்கர்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ