Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கும் சிகா வைரஸ் இந்தியாவையும் தாக்கும்'!

ஜெனிவா: பெண்ணின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கி, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் சிகா வைரஸ்,  இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக,  தென் அமெரிக்க கண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கிவரும் சிகா வைரஸ் தாக்குதல் ஏராளமான குழந்தைகளை பாதிப்படைய செய்து,  பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த சிகா வைரஸ்,  தொற்று நோய் கொசுக்களால் பரவும் என்றாலும் பாலுறவு மூலமும்  பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் வரும் 2018-ம் ஆண்டு வரை பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று  பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் இந்த நோயின் அறிகுறிகளைக்கூட இதுவரை அறிய முடியாதது மருத்துவ உலகத்திற்கு புதிய சவாலாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் தலை, மிகச்சிறியதாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறும் நிபுணர்கள்,  வெளியில் தெரியாமலும் இந்த வைரஸ் குழந்தைகளை தாக்கக்கூடியது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து சிகா வைரஸ் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் மருந்துகள் குறித்து அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் பரவலால் பெரிதும் அச்சம் நிலவி வருகிறது. அந்த வைரஸ் தொற்று பரவியிருக்கும் நாடு ஒன்றில் இருந்து,  அமெரிக்கா திரும்பிய வெர்ஜினியாவை சேர்ந்த ஒருவருக்கு அந்த வைரஸ் இருப்பது, கடந்த செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டது.
 
பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய சிகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவாக கண்டு பிடிக்குமாறு  அதற்குரிய தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு  அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்கெனவே  டெங்கு,  சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்  தாக்குதல்கள் பரவலாக உள்ளன. அதிலும் தமிழகத்தில் அவ்வப்போது இந்தக் காய்ச்சலுக்கு உயிரிழப்புகளும் நடக்கின்றன.  இத்தகைய சூழ்நிலையில்,மேலும் ஒரு வைரஸ் தொற்று நோய் ஆபத்து நிலவுவது கவனிக்கத்ததக்கது.

இதனிடையே இந்தியா போன்ற 23 நாடுகளுக்கு சிகா வைரஸ் நோய் எச்சரிக்கை உலக சுகாதார நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளது.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close