Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏம்பா அவரு வாராரு... அதையும் மூடுங்கப்பா...!

ரானிய அதிபரின் இத்தாலிய பயணத்தை முன்னிட்டு,  ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற கெப்டோலியன் மியூசியத்தில் உள்ள நிர்வாணச் சிலைகள் மூடி வைக்கப்பட்டன. அதிபர் ஹசன் ரஹானி, பார்வையிட்டு சென்ற பின்னரே, சிலைகள் பழைய நிலைக்குத் திரும்பின.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் அதிபர் ஒருவர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரஹானியின் இத்தாலி வருகையையொட்டி,  அவரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள இத்தாலி அரசு முடிவு செய்தது.

ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற  கேப்டொலியன் மியூசியத்தை ஈரான் அதிபருக்கு சுற்றி காட்டவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மியூசியத்தில் ஏராளமான நிர்வாண நிலை சிலைகள் உள்ளன. சொல்லப்போனால் இந்த சிலைகள்தான், இந்த மியூசியத்தின் அடையாளமே.

முக்கியமாக கிரேக்க தேவையான 'கெப்டோலியன் வீனஸ் ' சிலை,  முற்றிலும் நிர்வாண நிலையில்தான் இருக்கும்.  ஈரான் அதிபர் இந்த மியூசியத்தை பார்வையிட வருவதை முன்னிட்டு,  நிர்வாணச்சிலைகள் அனைத்தும் மூடிவைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து  அந்த சிலைகள் அனைத்தும் மரப்பெட்டி வைத்து மூடப்பட்டது.

ஈரான் அதிபருக்கு வழங்கப்பட்ட விருந்தில் கூட ஒயின், மது அனுமதிக்கப்படவில்லை. மீன் உணவுகள் பரிமாறப்பட்டன. கடந்த புதன்கிழமை, ரோமில் பேசிய ஈரான் அதிபர் ரஹானி, '' இத்தாலியர்கள் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றவர்கள். தங்கள் விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்பவர்கள் '' என புகழாரம் சூட்டினார்.

ஈரான் அதிபர் ரஹானி தற்போது 67 வயது நிரம்பியவர். ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் உள்ள கால்டொனியன் பல்கலையில் சட்டம் பயின்றவர். ''முற்போக்கு சிந்தனை நிரம்பிய அவரை, இத்தாலி அரசு பிற்போக்குவாதியாக காட்ட முனைவதாகவும் , 'இது சர்வதேச பிரச்னைதான் 'என்றும் இத்தாலி பத்திரிகைகள் கிண்டலடித்து செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக ஈரான் அதிபர் நிர்வாண சிலைகளை பார்வையிடுவதை போன்ற புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானால்,  தங்கள் நாட்டில் அதிபரின் இமேஜ் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஈரான் அதிகாரிகள் இத்தாலிய அரசை  நிர்வாண சிலைகளை மூடி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ