Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோஹ்லி ரசிகர் என்பதற்காக பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையா?

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேறொரு நாட்டின் டீமைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் ஏதோ ஒரு திறமையான விளையாட்டு வீரர் நம் மனத்தை வெகுவாகக் கவர்ந்திருப்பார். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் உமர் டிராஸ் என்பவருக்கும்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லி என்றால் உமருக்கு உயிர். பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும் மேட்ச்சில்கூட, லேசாக அவரது மனம் விராட் கோஹ்லி  மீதே இருக்குமாம். ‘‘விராட் கோஹ்லி திறமைக்கு நான் அடிமை. அவரின் டை ஹார்டு ஃபேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு இப்படி ஜெயில் தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கவில்லை!’’ என்று இப்போது ஜெயில் கம்பிகளுக்குப் பின்னாலிருந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் உமர் டிராஸ்.

உமர் மீது சுமத்தப்பட்ட குற்றம்தான் என்ன?

லாகூரில் இருந்து 200 கி.மீ. தள்ளி, ஒகாரா மாவட்டத்தில் பஞ்சாப் எனும் இடத்தில் இருக்கிறது உமர் டிராஸின் வீடு. ஜனவரி 26, இந்தியக் குடியரசு தினத்தன்று அடிலெய்டில், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நடந்த 20/20 மேட்ச்சில், விராட் கோஹ்லி 90 அடித்து சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கோஹ்லியின் தீவிர ரசிகரான உமர், கோஹ்லி எப்படியாவது செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று நினைத்தவர், அவருக்கு ஆதரவாக மூவர்ண இந்தியக் கொடியை, தனது வீட்டு மொட்டை மாடியில் பறக்க விட்டார் என்பதுதான் உமர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

‘‘தகவல் அறிந்து உமரின் வீட்டைச் சோதனை செய்தபோது, இந்தியக் கொடியோடு கோஹ்லியின் ஏகப்பட்ட வால்போஸ்டர்கள், படங்கள் சிக்கியிருக்கின்றன. பாகிஸ்தான் பீனல் கோடு 123 செக்ஷன் A-ன் படி அவரை மெயின்டனன்ஸ் ஆஃப் பப்ளிக் ஆர்டர் வழக்கில் கைது செய்துள்ளோம்!’’ என்கிறார் போலீஸ் அதிகாரி முகமது ஜமீல்.

‘‘இது இவ்வளவு பெரிய குற்றச் செயல் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்திய கிரிக்கெட் டீம் மிகவும் பிடிக்கும். காரணம், கோஹ்லி. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். என்னை ரசிகனாகப் பாருங்கள். நான் பாகிஸ்தானுக்கு எதிரான உளவாளி அல்ல!’’ என்று கெஞ்சி வருகிறார் உமர்.

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ