Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியன் சூப்பர் லீக்கை கொண்டாடிய ஃபேஸ்புக்!

மூக வலைதளங்களில் முதன்மையானதான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், அந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் ஃபேஸ்புக்கில் கொண்டாடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் மார்க். இரண்டு ஆண்டுகளேயான ஐ.எஸ்.எல்,  கடந்த ஆண்டு தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் எட்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் சுமார் 159 கோடி பேர் தற்போது ஃபேஸ்புக்கை பயன்படுத்திவருகின்றனர். 100 கோடி  பேர் குரூப்புகளையும், வாட்ஸ்-அப்பையும் பயன்படுத்திவருவதாக தெரிவித்துள்ளார் சக்கர்பெர்க்.

“2015-ம் ஆண்டில் பல சந்தோஷமான தருணங்களில் ஒன்றிணைந்தனர். ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி முதல் ஸ்டார் வார்ஸ் திரைப்பட ரிலீஸ் வரை பல விஷயங்கள் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களால் கொண்டாடப்பட்டது. நேபாளத்தில் பூகம்பம் வந்த போதும், பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும், மக்கள் ஒருவருக்கொருவர் ஃபேஸ்புக்கில் ஆறுதல் அளித்தனர். ஒன்றிணைந்து போராடினர்” என்று கூறியுள்ள மார்க், “பல கோடி நபர்கள் தங்கள் அன்புக்குரியவர்களோடு இணைந்திருக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்” என்றும்,  ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் சக்கர்பெர்க்.

கடந்த ஆண்டு உலகின் நான்காவது பிரபலமான கால்பந்து தொடராக இருந்த இந்தியன் சூப்பர் லீக்,  இவ்வருட முடிவில், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் விளையாடும் லா-லிகா தொடரைப் பின்னுக்குத்தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு போட்டியையும் சுமார் 27,090 பேர் நேரடியாக கண்டுகளித்துள்ளனர். கடந்த ஆண்டு தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில்,  எட்டாம் இடத்தில் ஐ.எஸ்.எல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.எல்லின் அங்கீகரிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை, சுமார் 27 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.

முந்தைய காலாண்டை விட இந்தக் காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வியாபாரம் 52% அதிகரித்துள்ளது. சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 47.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பைக் கொண்ட சக்கர்பெர்க்,  உலக பணக்காரர்கள் வரிசையில் 6-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்,  உலகின் மிகப்பெரிய பணக்காரராகத் தொடர்கிறார் (78 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு,  கடந்த ஆண்டை விடக் குறைந்த நிலையில் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு மட்டும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சக்கர்பெர்க் தனது நிறுவன வருமானத்தில் 99 சதவிதத்தை தனது அறக்கட்டளைக்குக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close