Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

200 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்: 36 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் (வீடியோ)

சீனாவில் சுரங்கத் தொழிற்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள், 36 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷடாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத் தொழிற்சாலை ஒன்று,  கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிலச்சரிவு ஏற்பட்டு மூடிக் கொண்டது. இந்த விபத்தில் 29 பேர் சிக்கியதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும், 13 பேர் மாயமானதாகவும் அதிகாரிகளால் முதலில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில்,  4 தொழிலாளர்கள் 200 மீட்டர் ஆழத்தில் சிக்கித் தவிப்பது தெரியவந்தது. இதனிடையே மீதமுள்ள அந்த 4 தொழிலாளர்களை மீட்கும் பணிகள்,  கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் கைவிடப்பட்டன. அதன்பிறகு சிறிய துளை வழியாக தண்ணீர் பாட்டில்கள் மூலம் திராவக உணவு வகைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 36 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கி தவித்து வந்த அந்த 4 தொழிலாளர்களும் கடும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்டுள்ள 4 பேர் உள்பட மொத்தம் 15 பேரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



கடந்த 2010-ம் ஆண்டு,  ஸான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் 32 பேர்,  69 நாட்கள் சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ