Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ)

பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.


பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்கிறது.

இந்த கப்பலின் உள்ளே தண்ணீர் செல்ல செல்ல இது விரைவில் மூழ்கிவிடும் என சரக்குகப்பலின் தளபதி கூறியுள்ளார். இருப்பினும் இந்த கப்பல் நிற்கும் இடம் கரையில் இருந்து தூரம் என்பதால் இதனை கரைக்குகொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் எனக் கூறியுள்ளார்.


இந்நிலையில், சரக்கு கப்பல் கடந்த மூன்று நாட்களாக தத்தளித்து வருவதால், பிரெஞ்சு கடலில் பயணம் செய்யும் பிற கப்பல்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு, விரைவில் கப்பலை மீட்க வேண்டும் என பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்