Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடுவானில் பழுதான சக்கரங்கள்: ரியல் ஹீரோவாக மாறிய விமானி!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில்,  புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை பத்திரமாக விமானி தரையிறக்கினார்.

பிஏ295 (BA295) என்ற விமானம்,  லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே,  விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

நிலைமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார். விமானம் தரை இறக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து, அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவரின் மனைவியான முரில் கிரே, விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானிக்கு முத்தங்கள் தருகிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.


மேலும், ரியல் ஹீரோவாக செயல்பட்ட விமானிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ