Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்-பதற்றம்!

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் இருந்த சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி, உயிரியல் பூங்காவில் 60 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உள்ளது. இங்கு சிதாலா மாதா, சந்தோஷி மாதா, பவானி மாதா என மூன்று சாமி சிலைகள் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் வாய்க்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி இந்த கோவிலில், அதை கட்டியவர்களும், பராமரிப்பவர்களும் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு தாடியுடன் வந்த 3 மர்ம நபர்கள் கைத்துப்பாக்கிகளுடன் வந்திருக்கின்றனர்.

அவர்கள், அங்கு இருந்தவர்களை வெளியே போகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பயந்துபோன அவர்களும் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த சாமி சிலைகளில் ஒன்றை சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இதன் பின்னர் அந்த கோவிலுக்கு பூஜை செய்யவும் யாரும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இங்குள்ள சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ