Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

67 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் ஒலித்த தேசியக் கீதம்! (வீடியோ)

இலங்கையின் 68-வது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் தேசியக் கீதம் பாடப்பட்டது. 1949க்கு பிறகு முதல் முறையாக இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது. இந்நிலையில், இலங்கை நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் தேசியக் கீதம் பாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அதிபர் மைத்ரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் அதிபர் சந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவை முன்னாள் அதிபர் ராஜபக்சே புறக்கணித்தார்.

இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழர்கள் நீண்ட காலமாகவே புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தது.

1949-ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இரண்டு மொழிகளிலும் தேசியக் கீதம் பாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் சிங்கள தேசியவாதிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பிரிவினை கோரிய விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் முடிவடைகின்ற நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசு முன்னெடுக்கின்ற நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி தேசியக் கீதம் பார்க்கப்படுகிறது.

 

முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சிங்கள மொழியில் மட்டும் தேசியக் கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோஷம் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ