Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதான்கோட் பாணியில் தாக்குதல்கள் தொடரும்: ஹபீஸ் சயீத் எச்சரிக்கை!

முசாஃபராபாத்: பதான்கோட் பாணியில் தாக்குதல்கள் தொடரும் என்று தீவிரவாதி ஹபீஸ் சயீத் இந்தியாவை எச்சரித்து உள்ளார்.

பதான்கோட் பாணியில் இந்தியாவில் தாக்குதல்கள் தொடரும் என்று பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாதிகள்தான் பதான்கோட்டில் தாக்குதல் நடத்தினர் என்று இந்தியா குற்றம்சாட்டி உள்ள நிலையில், ஐக்கிய ஜிகாதி கூட்டமைப்பு என்ற இயக்கத்தினரே அந்த தாக்குதலை நடத்தியதாக ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் கூறி உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத், பாகிஸ்தானின் முசாஃபராபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ''பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய ஐக்கிய ஜிகாதி கூட்டமைப்பின் தலைவர் சயீத் சலாஹுதீனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதலை மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். இனி இது போன்ற தாக்குதல்கள் தொடரும்.

காஷ்மீரில் 8 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியிருக்கும்போது, காஷ்மீரிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு உரிமை இல்லையா? காஷ்மீர் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இதுபோன்ற தாக்குதல்களை நடத்தலாம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close