Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைமையில் இந்திய எதிர்ப்பு பேரணி: பாகிஸ்தானில் நடந்தது!

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைமையில் 'இந்திய எதிர்ப்பு பேரணி' பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். இவர், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவர். ஹபீஸ் சயீத்தை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. ஹபீஸ் சயீத், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (4-ம் தேதி) இப்போது பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதலை மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். இனி இது போன்ற தாக்குதல்கள் தொடரும்'' என இந்தியாவுக்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு, அவரை அடக்கி வைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைமையில், இஸ்லாமாபாத் நகரில் நேற்று (5-ம் தேதி) இந்திய எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. ‘காஷ்மீர் ஆதரவு தினம்’ என்பதை முன்னிட்டு, இந்த பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஹபீஸ் சயீத் பேசுகையில், ''காஷ்மீர் விடுதலை பெறும்வரை, இந்தியாவுடனான உறவை பிரதமர் நவாஸ் ஷெரீப் துண்டிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close